248. அளிய தாமே ஆம்பல்! பாடியவர்: ஒக்கூர் மாசாத்தனார் திணை: பொதுவியல் துறை: தாபதநிலை அளிய தாமே சிறுவெள் ளாம்பல்! இளையம் ஆகத் தழையா யினவே; இனியே, பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப், பொழுது மறுத்து, இன்னா வைகல் உண்ணும் அல்லிப் படுஉம் புல் ஆயினவே.
புறநானூறு > பாடல்: 248
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக