256. அகலிதாக வனைமோ! பாடியவர்: பெயர் தெரிந்திலது திணை: பொதுவியல் துறை: முதுபாலை கலம்செய் கோவே : கலம்செய் கோவே! அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய சிறுவெண் பல்லி போலத் தன்னொடு சுரம்பல வந்த எமக்கும் அருளி, வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி அகலிது ஆக வனைமோ நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே!
புறநானூறு > பாடல்: 256
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக