259. புனை கழலோயே! பாடியவர்: கோடை பாடிய பெரும்பூதனார் திணை: கரந்தை துறை: செருமலைதல் (பிள்ளைப் பெயர்ச்சியுமாம்). ஏறுஉடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது, இலைபுதை பெருங்காட்டுத் தலைகரந்து இருந்த வல்வில் மறவர் ஒடுக்கம் காணாய், செல்லல், செல்லல் ; சிறக்க நின், உள்ளம்; முதுகுமெய்ப் புலைத்தி போலத் தாவுபு தெறிக்கும் ஆன்மேல் ; புடையிலங்கு ஒள்வாள் புனைகழ லோயே!
புறநானூறு > பாடல்: 259
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக