270. ஆண்மையோன் திறன்! பாடியவர்: கழாத்தலையார் திணை: கரந்தை துறை: கையறுநிலை பன்மீன் இமைக்கும் மாக விசும்பின் இரங்கு முரசின், இனம்சால் யானை, நிலந்தவ உருட்டிய நேமி யோரும் சமங்கண் கூடித் தாம்வேட் பவ்வே- நறுவிரை துறந்த நாறா நரைத்தலைச் சிறுவர் தாயே! பேரிற் பெண்டே! நோகோ யானே ; நோக்குமதி நீயே; மறப்படை நுவலும் அரிக்குரல் தண்ணுமை இன்னிசை கேட்ட துன்னரும் மறவர் வென்றிதரு வேட்கையர், மன்றம் கொண்மார், பேரமர் உழந்த வெருவரு பறந்தலை. விழுநவி பாய்ந்த மரத்தின், வாண்மிசைக் கிடந்த ஆண்மையோன் திறத்தே.
புறநானூறு > பாடல்: 270
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக