271. மைந்தன் மலைந்த மாறே! பாடியவர்: வெறி பாடிய காமக்கண்ணியார். திணை: நொட்சி. துறை: செருவிடை வீழ்தல். நீரறவு அறியா நிலமுதற் கலந்த கருங்குரல் நொச்சிக் கண்ணார் குரூஉத்தழை, மெல்இழை மகளிர் ஐதகல் அல்குல், தொடலை ஆகவும் கண்டனம் ; இனியே, வெருவரு குருதியடு மயங்கி, உருவுகரந்து, ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன்செத்துப், பருந்துகொண்டு உகப்பயாம் கண்டனம் மறம்புகல் மைந்தன் மலைந்த மாறே!
புறநானூறு > பாடல்: 271
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக