279. செல்கென விடுமே! பாடியவர்: ஒக்கூர் மாசாத்தியார் திணை: வாகை துறை: மூதின் முல்லை கெடுக சிந்தை ; கடிதுஇவள் துணிவே; மூதின் மகளிர் ஆதல் தகுமே; மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை, யானை எறிந்து, களத்துஒழிந் தன்னே; நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன், பெருநிரை விலக்கி, ஆண்டுப்பட் டனனே; இன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று மயங்கி, வேல்கைக் கொடுத்து, வெளிதுவிரித்து உடீஇப், பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி, ஒருமகன் அல்லது இல்லோள், ‘செருமுக நோக்கிச் செல்க’ என’ விடுமே!
புறநானூறு > பாடல்: 279
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக