281. நெடுந்தகை புண்ணே! பாடியவர்: அரிசில் கிழார் திணை: காஞ்சி துறை: பேய்க் காஞ்சி தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ, வாங்குமருப்பு யாழொடு பல்இயம் கறங்கக், கைபயப் பெயர்த்து மைஇழுது இழுகி; ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி, இசைமணி எறிந்து, காஞ்சி பாடி, நெடுநகர் வரைப்பின் கடிநறை புகைஇக், காக்கம் வம்மோ-காதலந் தோழீ! வேந்துறு விழுமம் தாங்கிய பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே!
புறநானூறு > பாடல்: 281
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக