282. புலவர் வாயுளானே! பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ. திணையும் துறையும் தெரிந்தில. எ·குஉளம் கழிய இருநில மருங்கின் அருங்கடன் இறுத்த பெருஞ்செ யாளனை, யாண்டுளனோ?’வென, வினவுதி ஆயின், . . . . . . . . . . . . வருபடை தாங்கிக் கிளர்தார் அகலம் அருங்கடன் இறுமார் வயவர் எறிய, உடம்பும் தோன்றா உயிர்கெட் டன்றே, மலையுநர் மடங்கி மாறுஎதிர் கழியத் அலகை போகிச் சிதைந்து வேறு ஆகிய பலகை அல்லது, களத்துஒழி யதே; சேண்விளங்கு நல்லிசை நிறீஇ, நாநவில் புலவர் வாய் உளானே.
புறநானூறு > பாடல்: 282
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக