49. எங்ஙனம் மொழிவேன்? பாடியவர்: பொய்கையார். பாடப்பட்டோன்: சேரமான் கோக்கோதை மார்பன். திணை: பாடாண். துறை: புலவராற்றுப் படை. நாடன் என்கோ? ஊரன் என்கோ? பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ? யாங்கனம் மொழிகோ, ஓங்குவாள் கோதையை? புனவர் தட்டை புடைப்பின், அயலது இறங்குகதிர் அலமரு கழனியும், பிறங்குநீர்ச் சேர்ப்பினும் , புள் ஒருங்கு எழுமே!
புறநானூறு > பாடல்: 49
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக