51. ஈசலும் எதிர்ந்தோரும் ! பாடியவர்: ஐயூர் முடவனார்! ஐயூர் கிழார் எனவும் பாடம். பாடப்பட்டோன்: பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி. திணை: வாகை. துறை; அரச வாகை. குறிப்பு; 'செம்புற்று ஈயல்போல ஒருபகல் வாழ்க்கைக்கு உலமருவோர்' என்னும் செறிவான அறவுரையைக் கூறுவது. நீர்மிகின், சிறையும் இல்லை; தீமிகின், மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை; வளிமிகின், வலியும் இல்லை; ஒளிமிக்கு அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி, ‘தண் தமிழ் பொது’ எனப் பொறாஅன், போர் எதிர்ந்து, கொண்டி வேண்டுவன் ஆயின், ‘கொள்க’ எனக் கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே; அளியரோ அளியர், அவன் அளிஇழந் தோரே; நுண்பல் சிதலை அரிதுமுயன்று எடுத்த செம்புற்று ஈயல் போல, ஒருபகல் வாழ்க்கைக்கு உலமரு வோரே!
புறநானூறு > பாடல்: 51
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக