59. பாவலரும் பகைவரும்! பாடியவர்: மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். பாடப்பட்டோன்: பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன். திணை: பாடாண். துறை : பூவைநிலை. ஆரம் தாழ்ந்த அணிகிளிர் மார்பின், தாள்தோய் தடக்கைத், தகைமாண் வழுதி! வல்லை மன்ற, நீநயந் தளித்தல்! தேற்றாய், பெரும! பொய்யே; என்றும் காய்சினம் தவிராது கடல்ஊர்பு எழுதரும் ஞாயிறு அனையை, நின் பகைவர்க்குத்; திங்கள் அனையை, எம்ம னோர்க்கே.
புறநானூறு > பாடல்: 59
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக