78. அவர் ஊர் சென்று அழித்தவன்! பாடியவர்: இடைக்குன்றூர் கிழார். பாடப்பட்டோன். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். திணை: வாகை. துறை: அரசவாகை. வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள், அணங்குஅருங் கடுந்திறல் என்ஐ முணங்கு நிமிர்ந்து, அளைச்செறி உழுவை இரைக்குவந் தன்ன மலைப்பரும் அகலம் மதியார், சிலைத்தெழுந்து, விழுமியம், பெரியம், யாமே; நம்மிற் பொருநனும் இளையன்; கொண்டியும் பெரிது என, எள்ளி வந்த வம்ப மள்ளர் புல்லென் கண்ணர்; புறத்திற் பெயர, ஈண்டுஅவர் அடுதலும் ஒல்லான்; ஆண்டுஅவர் மாண்இழை மகளிர் நாணினர் கழியத், தந்தை தம்மூர் ஆங்கண், தெண்கிணை கறங்கச்சென்று, ஆண்டு அட்டனனே.
புறநானூறு > பாடல்: 78
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக