79. பகலோ சிறிது! பாடியவர்: இடைக்குன்றூர் கிழார். பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். திணை: வாகை. துறை; அரசவாகை. மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி, மன்ற வேம்பின் ஒண்குழை மிலைந்து, தெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி, வெம்போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த வம்ப மள்ளரோ பலரே; எஞ்சுவர் கொல்லோ, பகல்தவச் சிறிதே?
புறநானூறு > பாடல்: 79
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக