85. யான் கண்டனன்! பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார். பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி. திணை: கைக்கிளை துறை: பழிச்சுதல். என்னைக்கு ஊர் இ·து அன்மை யானும், என்னைக்கு நாடு இ·து அன்மை யானும், ஆடுஆடு என்ப, ஒருசா ரோரே; ஆடன்று என்ப, ஒருசா ரோரே; நல்ல,பல்லோர் இருநன் மொழியே; அஞ்சிலம்பு ஒலிப்ப ஓடி, எம்இல், முழா அரைப் போந்தை பொருந்தி நின்று, யான்கண் டனன் அவன் ஆடா குதலே.
புறநானூறு > பாடல்: 85
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக