91. எமக்கு ஈத்தனையே! பாடியவர்: ஔவையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. திணை : தும்பை. துறை: வாழ்த்தியல். வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார் களம்படக் கடந்த கழல்தொடி தடக்கை, ஆர்கலி நறவின், அதியர் கோமான் போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி! பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி நீல மணிமிடற்று ஒருவன் போல மன்னுக, பெரும! நீயே தொன்னிலைப் பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது, ஆதல் நின்னகத்து அடக்கிச், சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே.
புறநானூறு > பாடல்: 91
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக