92. மழலையும் பெருமையும்! பாடியவர்: ஔவையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. திணை : தும்பை. துறை: இயன் மொழி. யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா; பொருள்அறி வாரா; ஆயினும், தந்தையர்க்கு அருள்வந் தனவால், புதல்வர்தம் மழலை; என்வாய்ச் சொல்லும் அன்ன; ஒன்னார் கடி மதில் அரண்பல கடந்து நெடுமான் அஞ்சி! நீ அருளல் மாறே.
புறநானூறு > பாடல்: 92
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக