97. மூதூர்க்கு உரிமை! பாடியவர்: ஔவையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. திணை : பாடாண். துறை: இயன் மொழி. போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள், உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின், ஊனுற மூழ்கி, உருவிழந் தனவே; வேலே, குறும்படைந்த அரண் கடந்தவர் நறுங் கள்ளின் நாடு நைத்தலின், சுரை தழீஇய இருங் காழொடு மடை கலங்கி நிலைதிரிந் தனவே; களிறே, எழூஉத் தாங்கிய கதவம் மலைத்து, அவர் குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின், பரூஉப் பிணிய தொடிகழிந் தனவே; மாவே, பரந்தொருங்கு மலைந்த மறவர் பொலம் பைந்தார் கெடப் பரிதலின், களன் உழந்து அசைஇய மறுக்குளம் பினவே; அவன் தானும், நிலம் திரைக்கும் கடல் தானைப் பொலந் தும்பைக் கழல் பாண்டில் கணை பொருத துளைத்தோ லன்னே; ஆயிடை, உடன்றோர் உய்தல் யாவது?’ தடந்தாள், பிணிக் கதிர், நெல்லின் செம்மல் மூதூர் நுமக்குஉரித்து ஆகல் வேண்டின், சென்றவற்கு இறுக்கல் வேண்டும் திறையே; மறிப்பின், ஒல்வான் அல்லன், வெல்போ ரான்’ எனச் சொல்லவும் தேறீர் ஆயின், மெல்லியல், கழற் கனி வகுத்த துணைச் சில் ஓதிக் குறுந்தொடி மகளிர் தோள்விடல் இறும்பூது அன்று; அ·து அறிந்துஆ டுமினே.
புறநானூறு > பாடல்: 97
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக