96. அவன் செல்லும் ஊர்! பாடியவர்: ஔவையார். பாடப்பட்டோன்: அதியமான் மகன் பொகுட்டெழினி. திணை : பாடாண். துறை: இயன் மொழி. அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின், திரண்டுநீடு தடக்கை, என்னை இளையோற்கு இரண்டு எழுந் தனவால், பகையே; ஒன்றே, பூப்போல் உண்கண் பசந்து, தோள் நுணுகி, நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று; ஒன்றே, ‘விழவு இன்று ஆயினும், படு பதம் பிழை யாது, மைஊன் மொசித்த ஒக்கலொடு, துறை நீர்க் கைமான் கொள்ளு மோ?’ என உறையுள் முனியும், அவன் செல்லும் ஊரே. புறநானூறு > பாடல்: 96