95. புதியதும் உடைந்ததும்! பாடியவர்: ஔவையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. திணை : பாடாண். துறை: வாண் மங்கலம், இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக் கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய் அணிந்து, கடியுடை வியன்நக ரவ்வே : அவ்வே, பகைவர்க் குத்திக், கோடுநுதி சிதைந்து, கொல்துறைக் குற்றில மாதோ ; என்றும் உண் டாயின் பதம் கொடுத்து, இல் லாயின் உடன் உண்ணும், இல்லோர் ஒக்கல் தலைவன், அண்ணல்எம் கோமான், வைந் நுதி வேலே.
புறநானூறு > பாடல்: 95
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக