காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக் காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற் காதல் வழிசெய்து கங்கை வழிதருங் காதல் வழிசெய்து காக்கலு மாமே
திருமந்திரம் > மூன்றாந் தந்திரம் > 12 கலை நிலை > பாடல்: 712
The Lord of the Fore-head-eye That showed the path of Love Divine; Seek Him in love intense; The Ganga in cranium will in grace flow; And in love exceeding, He your saviour will be.
தன்னை அடைவதற்கு அன்பு ஒன்றையே வழியாக அமைத்துள்ள முக்கட் கடவுளாகிய சிவபெருமானை, அவ் அன்பைத் தரும் வழியாகிய அறிவை உண்டாக்கி, அவ் அறிவு பொருந்த அவனை நோக்கினால், அன்பு பெருகி, அது வழியாக இன்ப வெள்ளம் பெருகும். அது பெருகியபின், அந்த அன்பையே பின்னும் துணையாகப் பற்றி, அந்த இன்ப வெள்ளம் வற்றிப் போகாதவாறு பாதுகாத்துக் கொள்ளுதலும் கூடும்.