திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| ஊன் அறியாது என்றும் உயிர் அறியாதது ஒன்றும் இவை தான் அறியாது ஆர் அறிவார் தான். | ஊனறியா தென்று முயிரறியா தொன்றுமிவை தானறியா தாரறிவார் தான். |
| பொருள் : உடம்பு சடம். அதற்கு எக்காலத்திலும் அறிவு இல்லை. ஆகவே அது தனக்குரிய உயிரை அறிந்து சென்று சேர மாட்டாது. உயிரும் இருள் மலத்தால் மூடப் பெற்று அறிவிழந்து நிற்கிறது. ஆகவே அதுவும் தனக்குரிய உடம்பை அறிந்து எடுத்துக் கொள்ளாது. அப்படியானால் இந்த உயிர் இன்ன உடம்பைப் பெறுதற்குரியது என்று அறிந்து கூட்டுவிப்பது எது? இவ்விரண்டையும் கூட்டிச் செயற்படுத்துவது திருவருளே யாகும். திருவருள் கூட்டுவிக்காமல் வேறு யார் அறிந்து கூட்டுவிக்க முடியும்? | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows