வார்ந்த ருட்கண் நீர்சொரிய நம்பிகேட்ப வண்டமிழ்கள் இருந்த இடம்மன்றுளாடும் கூர்ந்த இருட்கண்டர் புறக்கடையின் பாங்கர்க் கோலமலர்க் கைகள்அடையாளமாகச் சார்ந்தன என்றருள்செய்து தொண்டர்பேறுஞ் சாற்றுதலால் சகதலத்தோர் அருளைச்சார ஆர்ந்த தமிழ் இருந்த இடம் அன்பர் செய்தி அத்தனையும் நம்பி மனத் தருளிற் கொண்டார்