அத்தகையோர் தமிழ்வைத்த மூவர் வந்தால் அறைதிறக்கும் என உரைக்க அரசன்தானும் மெய்தகு சீர் அம்பலவர்க் குற்ற செல்வவிழா எடுத்து விளம்பு தமிழ் மூவர் தம்மை உய்த்தணி வீதி யினிலுலா வருவித்தும்பர் நாயகன்தன் கோயில் வலமாக்கி யுள்ளே சித்தமெலாம் உருக்குதமிழ்இருக்கை சேரச் சேர்த்தி அவர் சேர்ந்ததென செப்பி நின்றான்