ஐயர் நடமாடும் அம்பலத்தின் மேல்பால் அருள்பெற்ற மூவர்தம தருள் சேர் செய்ய கையதுவே இலச்சினை யாய் இருந்த காப்பைக் கண்டவர்கள் அதிசயப்பக் கடைவாய்நீக்கிப் பொய்யுடையோர் அறிவுதனை புலன்கள் மூடும் பொற்பது போல் போமிகு பாடல் தன்னை நொய்யசிறு வன்மீகம் மூடக் கண்டு நொடிப் பளவினிற் சிந்தை நொந்த வேந்தன்