77. யார்? அவன் வாழ்க! பாடியவர்: இடைக்குன்றூர் கிழார். பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன். திணை: வாகை. துறை: அரசவாகை. கிண்கிணி களைந்த கால் ஓண் கழல்தொட்டுக், குடுமி களைந்த நுதல்வேம்பின் ஒண்தளிர் நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து, குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி, நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன் யார்கொல்? வாழ்க, அவன் கண்ணி! தார்பூண்டு, தாலி களைந்தன்றும் இலனே; பால்விட்டு உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை அழுந்தபற்றி, அகல்விசும்பு ஆர்ப்புஎழக் மகிழ்ந்தன்றும்,இகழ்ந்தன்றும்,அதனினும் இலனே.
புறநானூறு > பாடல்: 77
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக