101. பலநாளும் தலைநாளும்! பாடியவர்: ஔவையார், பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. திணை: பாடாண். துறை: பரிசில் கடா நிலை. ஒருநாள் செல்லலம்; இருநாட் செல்லலம்; பன்னாள் பயின்று, பலரொடு செல்லினும் தலைநாள் பொன்ற விருப்பினன் மாதோ; அணிபூண் அணிந்த யானை இயல்தேர் அதியமான்; பரிசில் பெறூஉங் காலம் நீட்டினும், நீட்டா தாயினும், யானைதன்’ கோட்டிடை வைத்த கவளம் போலக் கையகத் தது அது; பொய்யா காதே; அருந்தே மாந்த நெஞ்சம்! வருந்த வேண்டா; வாழ்க, அவன் தாளே!
புறநானூறு > பாடல்: 101
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக