102. சேம அச்சு! பாடியவர்: ஔவையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினி. திணை: பாடாண். துறை: இயன்மொழி. ‘எருதே இளைய; நுகம் உண ராவே; சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே; அவல் இழியினும், மிசை ஏறினும், அவணது அறியுநர் யார்?’ என, உமணர் கீழ்மரத்து யாத்த சேமஅச்சு அன்ன, இசை விளங்கு கவிகை நெடியோய்! திங்கள் நாள்நிறை மதியத்து அனையை; இருள் யாவண தோ, நின் நிழல்வாழ் வோர்க்கே?
புறநானூறு > பாடல்: 102
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக