103. புரத்தல் வல்லன்! பாடியவர்: ஔவையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. திணை: பாடாண். துறை: விறலியாற்றுப்படை. ஒருதலைப் பதலை தூங்க, ஒருதலைத் தூம்புஅகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கிக், ‘கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்?’ எனச் சுரன்முதல் இருந்த சில்வளை விறலி! செல்வை யாயின், சேணோன் அல்லன்; முனைசுட வெழுந்த மங்குல் மாப்புகை மலைசூழ் மஞ்சின், மழ களிறு அணியும் பகைப்புலத் தோனே, பல் வேல் அஞ்சி; பொழுது இடைப் படாஅப் புலரா மண்டை மெழுகுமெல் அடையிற் கொழுநிணம் பெருப்ப, வறத்தற் காலை யாயினும், புரத்தல் வல்லன்; வாழ்க, அவன் தாளே!
புறநானூறு > பாடல்: 103
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக