100. சினமும் சேயும்! பாடியவர்: ஔவையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. திணை : வாகை. துறை: அரச வாகை. குறிப்பு: அதியமான் தவமகன் பிறந்தானைக் கண்டானை, அவர் பாடியது. கையது வேலே; காலன பு¨ ழல்; மெய்யது வியரே; மிடற்றது பசும்புண்;னக வெட்சி மாமலர், வேங்கையடு விரைஇச், சுரி இரும் பித்தை பொலியச் சூடி, வரி வயம் பொருத வயக்களிறு போல, இன்னும் மாறாது சினனே; அன்னோ! உய்ந்தனர் அல்லர், இவண் உடற்றி யோரே; செறுவர் நோக்கிய கண், தன் சிறுவனை நோக்கியுஞ், சிவப்பு ஆனாவே.
புறநானூறு > பாடல்: 100
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக