13. நோயின்றிச் செல்க! பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். பாடப்பட்டோன் : சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி. திணை : பாடாண். துறை : வாழ்த்தியல் ‘இவன் யார்?’ என்குவை ஆயின், இவனே, புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய, எய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பின், மறலி அன்ன களிற்றுமிசை யோனே; களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும், பன்மீன் நாப்பண் திங்கள் போலவும், சுறவு இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப, மரீஇயோர் அறியாது, மைந்துபட் டன்றே; நோயிலன் ஆகிப் பெயர்கதில் அம்ம! பழன மஞ்ஞை உகுத்த பீலி கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும், கொழுமீன், விளைந்த கள்ளின், விழுநீர் வேலி நாடுகிழ வோனே.
புறநானூறு > பாடல்: 13
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக