253. கூறு நின் உரையே! பாடியவர்: குளம்பாதாயனார் திணை: பொதுவியல் துறை: முதுபாலை என்திறத்து அவலம் கொள்ளல், இனியே; வல்வார் கண்ணி இளையர் திளைப்ப, ‘நாகாஅல்’ என வந்த மாறே, எழாநெல் பைங்கழை பொதிகளைந்து அன்ன விளர்ப்பின், வளைஇல், வறுங்கை ஓச்சிக், கிளையுள்’ஒய்வலோ? கூறுநின் உரையே!
புறநானூறு > பாடல்: 253
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக