254. ஆனாது புகழும் அன்னை! பாடியவர்: கயமனார் திணை: பொதுவியல் துறை: முதுபாலை இளையரும் முதியரும் வேறுபுலம் படர, எதிர்ப்ப எழாஅய், மார்பமண் புல்ல, இடைச்சுரத்து இறுத்த, மள்ள ! விளர்த்த வளையில் வறுங்கை ஓச்சிக் கிளையுள், ‘இன்னன் ஆயினன், இளையோன்’ என்று, நின்னுரை செல்லும் ஆயின்,’ மற்று முன்ஊர்ப் பழுனிய கோளி ஆலத்துப், புள்ளார் யாணர்த் தற்றே’ என் மகன் வளனும் செம்மலும் எமக்கு’ என , நாளும் ஆனாது புகழும் அன்னை யாங்குஆ குவள்கொல் ? அளியள் தானே!
புறநானூறு > பாடல்: 254
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக