262. தன்னினும் பெருஞ் சாயலரே! பாடியவர்: மதுரைப் பேராலவாயர் திணை: வெட்சி துறை: உண்டாட்டு (தலை தோற்றமுமாம்) நறவும் தொடுமின் ; விடையும் வீழ்மின்; பாசுவல் இட்ட புன்காற் பந்தர்ப் புனல்தரும் இளமணல் நிறையப் பெய்ம்மின்- ஒன்னார் முன்னிலை முருக்கிப், பின்நின்று; நிரையோடு வரூஉம் என்னைக்கு உழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே.
புறநானூறு > பாடல்: 262
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக