274. நீலக் கச்சை! பாடியவர்: உலோச்சனார் திணை: தும்பை துறை: எருமை மறம் நீலக் கச்சைப் பூவார் ஆடைப், பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன் மேல்வரும் களிற்றொடு வேல்துரந்து ; இனியே, தன்னும் துரக்குவன் போலும்-ஒன்னலர் எ·குடை வலத்தர் மாவொடு பரத்தரக், கையின் வாங்கித் தழீஇ, மொய்ம்பின் ஊக்கி, மெய்க்கொண் டனனே;
புறநானூறு > பாடல்: 274
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக