275. தன் தோழற்கு வருமே! பாடியவர்: ஒரூஉத்தனார் திணை: தும்பை துறை: எருமை மறம் கோட்டம் கண்ணியும், கொடுந்திரை ஆடையும், வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும், ஒத்தன்று மாதோ, இவற்கே : செற்றிய திணிநிலை அலறக் கூவை போழ்ந்து , தன் வடிமாண் எ·கம் கடிமுகத்து ஏந்தி, “ஓம்புமின், ஓம்புமின், இவண்!’ ஓம்பாது தொடர்கொள் யானையின் குடர்கால் தட்பக், கன்றுஅமர் கறவை மான ; முன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே.
புறநானூறு > பாடல்: 275
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக