285. தலைபணிந்து இறைஞ்சியோன்! பாடியவர்: அரிசில் கிழார் திணை: வாகை துறை: சால்பு முல்லை பாசறை யீரே ! பாசறை யீரே ! துடியன் கையது வேலே ; அடிபுணர் வாங்குஇரு மருப்பின் தீந்தொடைச் சீறியாழ்ப் பாணன் கையது தோலே ; காண்வரக் கடுந்தெற்று மூடையின் .. .. .. வாடிய மாலை மலைந்த சென்னியன்; வேந்துதொழில் அயரும் அருந்தலைச் சுற்றமொடு நெடுநகர் வந்தென, விடுகணை மொசித்த மூரி வேண்டோள் .. .. .. .. .. சேறுபடு குருதிச் செம்மலுக் கோஒ! மாறுசெறு நெடுவேல் மார்புஉளம் போக; நிணம்பொதி கழலொடு நிலம் சேர்ந் தனனெ; அதுகண்டு, பரந்தோர் எல்லாம்-புகழத் தலைபணிந்து இறைஞ்சி யோனே, குருசில் ! _ பிணங்குகதிர் அலமரும் கழனித் தண்ணடை ஒழிய; இலம்பாடு ஒக்கல் தலைவற்குஓர் கரம்பைச் சீறூர் நல்கினன் எனவே.
புறநானூறு > பாடல்: 285
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக