46. அருளும் பகையும்! பாடியவர்: கோவூர் கிழார். பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன். திணை: வஞ்சி. துறை; துணை வஞ்சி. குறிப்பு: மலையமான் மக்களை யானைக் காலில் இட்ட காலத்துப் பாடி உய்யக் கொண்டது. நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும் இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை; இவரே, புலனுழுது உண்மார் புன்கண் அஞ்சித், தமதுபகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்! களிறுகண்டு அழூஉம் அழாஅல் மறந்த புன்றலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி, விருந்திற் புன்கண்நோ வுடையர்; கெட்டனை யாயின், நீ வேட்டது செய்ம்மே!
புறநானூறு > பாடல்: 46
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக