57. காவன்மரமும் கட்டுத்தறியும்! பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார். பாடப்பட்டோர்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன். திணை: வஞ்சி. துறை : துணை வஞ்சி. வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும், புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன, உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற! நின்னொன்று கூறுவது உடையோன்; என்னெனின், நீயே, பிறர்நாடு கொள்ளும்காலை, அவர் நாட்டு இறங்கு கதிர் கழனிநின் இளையரும் கவர்க: நனந்தலைப் பேரூர் எரியும் நைக்க; மின்னு நிமிர்ந் தன்ன நின்ஒளிறு இலங்கு நெடுவேல் ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம் கடிமரம் தடிதல் ஓம்பு! நின் நெடுதல் யானைக்குக் கந்தாற் றாவே.
புறநானூறு > பாடல்: 57
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக