81. யார்கொல் அளியர்? பாடியவர்: சாத்தந்தையார் பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி திணை:வாகை துறை: அரசவாகை ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே கார்ப்பெயல் உருமின் முழங்கல் ஆனாவே; யார்கொல் அளியர் தாமே ஆர்; நார்ச் செறியத் தொடுத்த கண்ணிக் கவிகை மள்ளன் கைப்பட் டோரே?
புறநானூறு > பாடல்: 81
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக