82. ஊசி வேகமும் போர் வேகமும்! பாடியவர் :சாத்தந்தையார். பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி. திணை: வாகை. துறை: அரசவாகை. சாறுதலைக் கொண்டெனப், பெண்ணீற்றுற்றெனப் பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக், கட்டில் நிணக்கும் இழிசினன் கையது போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ; ஊர்கொள வந்த பொருநனொடு, ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே!
புறநானூறு > பாடல்: 82
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக