தெரித்தது என் கொண்டு எனை உருத்திர பசுபதி! செடிய னேனையும் அடிமை செய்யப் படிவம் கொண்டு வடிவுகாட்டு இல்லாப் பெண்ணை ஆளும் வெண்ணெய் மெய்ய! அவத்தையில் தெரித்தனன் ஆயின் அவத்தை தெரித்தாங்கு இருத்தலும் இலனே திருத்தும் காலம் முதலிய கருவி ஆயின் மாலும் பிரமனும் வந்து எனை அடையார் ஓதும் காலை ஒன்றை ஒன்று உணரா சேதனம் அன்று அவை பேதைச் செயலும் இச் சேதன ஆனால் செயல் கொள வேண்டும் போதம் அவற்றைப் புணர்வதை அறியேன் கருவித் திரளினும் காண்பது ஓர் ஒன்றாய் ஒருவுதல் அறியேன் உணர்வு இலன் ஆதலின் நிற்கொடு கண்டனன் ஆயின் எற்குக் கருவி ஆயினை பெருமையும் இலவே யானே பிரமம் கோனே வேண்டா இன்னும் கேண்மோ, மன்ன! நின்னின் முன்னம் என்றன் உணர்வு இலன் ஆதலின் என்னைக் காண்பினும் காண்பல உன்னோடு ஒருங்கு காண்பினும் காண்பல அரும்துணை கண்டவாறு ஏது எனது கண்ணே! அண்டவாண! அருட்பெரும் கடலே!