86. கல்லளை போல வயிறு! பாடியவர்: காவற் பெண்டு காதற்பெண்டு எனவும் பாடம். பாடப்பட்டோன் திணை: வாகை துறை: ஏறாண் முல்லை சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன் யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும் புலி சேர்ந்து போகிய கல்அளை போல, ஈன்ற வயிறோ இதுவே; தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே!
புறநானூறு > பாடல்: 86
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக