265. வென்றியும் நின்னோடு செலவே! பாடியவர்: சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் திணை: கரந்தை துறை: கையறுநிலை ஊர்நனி இறந்த பார்முதிர் பறந்தலை, ஓங்குநிலை வேங்கை ஒள்ளிணர் நறுவீப் போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்துப், பல்ஆன் கோவலர் படலை சூட்டக், கல்ஆ யினையே-கடுமான் தோன்றல்! வான்ஏறு புரையும்நின் தாள்நிழல் வாழ்க்கைப் பரிசிலர் செல்வம் அன்றியும் ! விரிதார்க் கடும்பகட்டு யானை வேந்தர் ஒடுங்க வென்றியும், நின்னொடு செலவே.
புறநானூறு > பாடல்: 265
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக