திருமந்திரம் > ஐந்தாம் தந்திரம் > 19. நிராசாரம் > பாடல்: 1554
The Boat of Life By Divine Wisdom guided Discharges quick its cargo At the City Ancient; Having seen that unerring prospect These wretched men of ignoble deeds Think not of His Holy Feet, In devotion replete.
சிவனது திருவடியாகிய, ஞானத்தொடு பொருந்தி வருவித்துஏறிய ஒப்பற்ற ஓர் தோணி, வினையாகிய சரக்கினை அது நின்ற உடலாகிய மூடையோடு சிவலோகமாகிய பழைய நகரத்தை அடைந்து, இறக்கிவிடுகின்ற அறிகுறிகளை அறிந்தும், தீவினை யுடையோர் அத்திருவடிகளைப் பொருந்தி நிற்க எண்ணுவதில்லை.