திருமந்திரம் > ஆறாம் தந்திரம் > 7. அருளுடைமையின் ஞானம் வருதல் > பாடல்: 1649
By Siva's Grace some become Devas By Siva's Grace some equal Gods By Siva's Grace Karmas near not; When you have Siva's Grace, You shall enter His Kingdom, indeed.
சிவனது அருளாலே சிலர், தேவர் பதவியை வேண்டின் அவற்றையும் பெறுவர். சிலர் அதனால் மக்களுடம்பில் நின்றே தெய்வங்களோடு ஒத்த ஆற்றல் பெற்று விளங்குவர். எனினும், சிவனது அருளால் சிறப்பாக வினை நீக்கம் உண்டாதலால், சிவனது அருள் ஒருவர்க்கு உண்மையாகக் கூடிற்றுஎன்றால், அதன் பயனாக அவர்க்குச் சிவலோகமே கிடைக்கும்.