சிந்தையின் உள்ளே எந்தை திருவடி சிந்தையின் எந்தை திருவடிக் கீழது எந்தையும் என்னை அறியகி லான்ஆகில் எந்தையை யானும் அறியகி லேனே. 4
திருமந்திரம் > எட்டாம் தந்திரம் > 17. அடிதலை அறியும் திறங்கூறல் > பாடல்: 2428
Within my thoughts Are my Father's Holy Feet; At my Father's Holy Feet; Are my thoughts centered If my Father knows me not, Neither will I my Father know.
(முன் மந்திரத்தில் சொல்லியவாறு சிவனது திருவடி -யினை எனது தலைமேல் மட்டும் உள்ளதன்று எனது சித்தத்தி னுள்ளேயும் உள்ளது. இனி எனது சித்தத்தை உள்ளடக்கி, வெளியி -லேயும் உள்ளது. (இந்நிலை, அவன்தானே இரங்கி எனக்குச் செய்த அருட்செயலாகும். ஏனெனில்,) முதற் கண் அவன் என்னை நினையாதிருப்பின், நான் அவனை நினைப்பதற்கே வழியில்லை.