கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிடைப் பண்ணுதல் செய்து பசுபாசம் நீங்கிட எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை மண்முத லாக வகுத்துவைத் தானே
திருமந்திரம் > இரண்டாந் தந்திரம் > 14 கரு உற்பத்தி > பாடல்: 474
The Lord made the body, A name and form it assumed; Then, for Jiva his redemption to seek He created earth and Tattvas many, --Thus speak the Vedas.
உயிர்கள் தூலமும், சூக்குமமும் ஆய உடம்புகளையே உடம்பாகப் பற்றிநில்லாது, சிவபெருமானது திருப்பெயராகிய திருவைந்தெழுத்தே தம்முள் ஒன்றித் தமக்கு உடம்பாகுமாறு அதனை மொழிதல் (வாசகம்), முணுமுணுத்தல் (உபாஞ்சு), கருதல் (மானதம்), உணர்தல் (சுத்தமானதம்) என்னும் முறைகளில் கணித்து (செபித்து)ப் பாசங்களினின்றும் நீங்குமாறு வேதம் முதலாகப் பொருந்திய பரந்த நூல்களை மண்ணுலகம் முதலிய எல்லா உலகங்களிலும் வகுத்து வைத்துள்ளான்.