அன்புடனே நின்று அமுதமும் ஏற்றியே பொன்செய் விளக்கும் புகைதீபம் திசைதொறும் துன்பம் அகற்றித் தொழுவோர் நினையுங்கால் இன்புட னேவந்து எய்திடும் முத்தியே. 3
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 3. அருச்சனை > பாடல்: 1005
Offer oblations in love, Light lamps golden, Spread incense of fragrant wood And lighted camphor in directions all, Forget your worldly worries, and meditate, You shall attain rapturous Mukti true.
நிவேதனம், தீபம், தூபம் என்பவைகளால், எட்டுத் திக்கிலும் வரற்பாலனாவாகிய தடைகளை அகற்றி வழிபாடு செய்பவர், தாம் விரும்பும் பொழுது முத்திநிலை இன்பமே வடிவாய் வந்து எய்தப் பெறுவர்.