சோதித்த பேரொளி மூன்று ஐந்து எனநின்ற ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள் நீதிக்கண் ஈசன் நெடுமால் அயனென்று பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே. 8
திருமந்திரம் > பாயிரம் > 9 திரு மும்மூர்த்திகளின் முறைமை > பாடல்: 110
The ignorant know not, from the First did leap The Light that flamed into Three and Five; So blindly groping, lost in maze of words, Isa, Mal and Aya, to graded ranks assign.
சிவதன்ம நூலுள், `உருத்திரன், மால் அயன்` என்னும் மூவரும், மெய்யுணர்ந்தோர் ஆய்ந்துணர்ந்த பேரொளி யாகிய அநாதிப் பொருள் ஒன்றே மூன்றாயும், ஐவந்தாயும் நின்ற முதனிலைகளில் அமைவனவாதலை அந்நூலை அறியாதார் அறிய மாட்டார். அதனால், அவர் உலகியல் நூலே பற்றி அவரை வேறு வேறு கடவுளாக்கி அவருள் ஒருவராகப் புகழ்ந்தும், ஏனையிருவரையும் இகழ்ந்தும் திரிகின்றனர்.