121. புலவரும் பொதுநோக்கமும்! பாடியவர் : கபிலர். பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி. திணை: பொதுவியல். துறை: பொருண் மொழிக் காஞ்சி. ஒரு திசை ஒருவனை உள்ளி, நாற்றிசைப் பலரும் வருவர், பரிசில் மாக்கள்; வரிசை அறிதலோ அரிதே; பெரிதும் ஈதல் எளிதே, மாவண் தோன்றல்; அது நற்கு அறிந்தனை யாயின், பொது நோக்கு ஒழிமதி, புலவர் மாட்டே! புறநானூறு > பாடல்: 121